பள்ளி செல்லும் குழந்தைகளின் கண் பார்வையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான டிப்ஸ்கள்!


Jansi Malashree V
20-03-2024, 13:10 IST
www.herzindagi.com

    பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு வரக்கூடிய குழந்தைகளின் தேடல் மொபைல் போன்களாகத் தான் இருக்கும். தூங்கும் வரை மொபைல் பார்க்கும் போது குழந்தைகளின் கண்பார்வையில் சிரமம் ஏற்படுகிறது.

    கண்பார்வையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குழந்தைகளுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமைகள். பிரச்சனைத் தவிர்க்க இந்த பழக்கங்களை இனி மறக்காமல் பின்பற்றுங்கள்.

20-20- 20 விதியைப் பின்பற்றுதல்:

    குழந்தைகளின் கண்பார்வைத் திறனை மேம்படுத்த 20-20-20 விதியைப் பின்பற்றவும். மொபைல் பார்க்கும் குழந்தைகளை ஒவ்வொரு 20 மணி நேரத்திற்கு ஒருமுறை 20 அடி தொலைவில் உள்ள பொருள்களைப் பார்க்க செல்லவும். இது குழந்தைகளின் கண் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

வெளிப்புற நடவடிக்கை:

    குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முயற்சிக்கவும்.சூரிய ஒளியில் படுமாறு விளையாடுவதால் கண்களில் கூச்ச உணர்வு நீங்கும்

சமச்சீர் உணவு:

    சமச்சீர் உணவு உட்கொள்வது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, கண் பார்வையை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். எனவே கீரை வகைகள், காய்கறிகள் போன்றவற்றை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளவும்.

நீரேற்றம்:

    குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதால் அவர்களின் உடல் சோர்வாகக்கூடும். எனவே அதிகளவு தண்ணீர் குடிக்கச் சொல்லவும். இது கண்களில் ஏற்படக்கூடிய வறட்சியைக் குறைக்க உதவியாக இருக்கும்.

    மொபைல் பயன்படுத்தும் போது குறிப்பிட்ட தூரத்தில் வைத்துப் பார்க்கச் சொல்ல வேண்டும். மேலும் ஆண்டிற்கு ஒருமுறை வழக்கமான கண் பரிசோதனையை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.