மார்பகங்களில் அதிகமாக வியர்ப்பதை கட்டுப்படுத்த சிறந்த வழிகள்..!
Alagar Raj AP
11-05-2024, 13:00 IST
www.herzindagi.com
மார்பகம் மற்றும் அதனை சுற்றி வியர்ப்பது என்பது பெண்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களில் ஒன்று. குறிப்பாக பெரிய மார்பகம் இருக்கும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். இதனால் தோல் எரிச்சல், ஒவ்வாமை போன்ற தோல் பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம்.
காட்டன் பிரா
பேடட் பிராக்களை அணிவதைத் தவிர்த்து, பருத்தியால் செய்யப்பட்ட பிராக்களை அணியுங்கள். குறிப்பாக கோடை காலத்தில். இது காற்றோட்டத்தை அளித்து வியர்வையை குறைக்கும்.
மார்பக பேட்கள்
பாலூட்டும் தாய்மார்கள் பால் கசிவை உறிஞ்ச அணியும் மார்பக பேட்களை வியர்வையை உறிஞ்ச அணியலாம்.
சுகாதாரமாக இருங்கள்
வியர்வை காரணமாக பாக்டீரியா தொற்று ஏற்படும், எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை மரபாக பகுதிகளில் நன்கு சுத்தம் செய்யுங்கள்.
பேண்டி லைன்
பிறப்புறுப்பில் வியர்வையை உறிஞ்சும் பேண்டி லைனரை மார்பக பகுதியிலும் பயன்படுத்தலாம். இவை வியரவையை உறிஞ்சுவதால் உங்கள் ஆடைகளை வியர்வை கரையில் இருந்து பாதுகாக்கலாம்.
ஆர்கான் எண்ணெய்
ஆர்கான் எண்ணெய் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு கொண்டது என்பதால் இதை மார்பகத்தில் தடவினால் வியர்வை மற்றும் தோல் எரிச்சலைக் குறைக்க முடியும்.
டால்கம் பவுடர்
மார்பகங்களில் டால்கம் பவுடரைப் பயன்படுத்துவது வியர்வையை உறிஞ்சி உராய்வைத் தடுக்கிறது. மேலும் வியர்வையால் ஏற்படும் தோல் பாதிப்புகளை தடுக்கிறது.