பெண்களே.. வயது அதிகரிக்க அதிகரிக்க இந்த விஷயங்களில் கவனம் தேவை!
Alagar Raj AP
17-03-2024, 12:00 IST
www.herzindagi.com
தூக்கமின்மை
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் உற்பத்தி குறைகிறது. அதனால் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தொடங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்
பெண்களுக்கு வயதாகும் போது பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடு குறைவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
மூட்டுவலி
பெண்களுக்கு 50 வயதுக்குப் பிறகு கால்சியம் அளவு குறைந்து எலும்புகள் வலுவிழத்தல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
சர்க்கரை நோய்
இரும்புச்சத்து குறைபாடு. மெனோபாஸ் காரணமாக பெண்களுக்கு உடல் எடை கூடும். இவை அதிகரித்தால் பிபி, சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளது.
இதய நோய்
இவற்றுடன் பெண்களுக்கு வயதாகும் போது கொலஸ்ட்ரால் அதிகரித்து இதயம் தொடர்பான பிரச்சனைகளும் அதிகமாக வாய்ப்புள்ளது.
எனவே பெண்கள் 40 வயதைத் தாண்டும் போது வைட்டமின்கள், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.