வெள்ளியால் செய்யப்பட்ட மீன் உருவங்களை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் வாஸ்து பலன்கள்


Alagar Raj AP
20-05-2024, 18:00 IST
www.herzindagi.com

    வாஸ்து சாஸ்திரத்தின் படியும் அறிவியலின் படியும் வெள்ளிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஏனெனில், வெள்ளியானது தூய்மையான மற்றும் குளிரான உலோகமாக கருதப்படுகிறது. எனவே இந்த பதிவில் வெள்ளியால் செய்யப்பட்ட மீன் உருவங்களை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் வாஸ்து பலன்கள் குறித்து காண்போம்.

    வீட்டின் பிரதான அறையில் வெள்ளி மீன் சிலையை வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் உருவாகும்.

    படுக்கையில் அறையில் வெள்ளி மீன் உருவத்தை வைத்து அதை காலை எழுந்தவுடன் பார்ப்பது அன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும்.

    வீட்டில் வெள்ளி மீன் உருவங்களை வைப்பதன் மூலம், வீட்டில் உள்ள அனைவரும் நோய்நொடியின்றி வாழ்வார்கள்.

    வெள்ளி மீன் உருவத்தை தென்கிழக்கு திசையில் வியாபார இடங்களில் வைப்பது வியாபாரத்தை மேம்படுத்தும்.

    வாஸ்து படி பர்ஸில் ஒரு சிறிய வெள்ளி மீனை வைத்திருப்பது பணத்தை ஈர்க்கும்.

    வெள்ளி மீன் மோதிரம் அல்லது செயினை அணிவது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.