காலாண்டு விடுமுறையில் குழந்தைகளை வீட்டிற்குள் விளையாட வைக்க சிம்பிள் டிப்ஸ்!


S MuthuKrishnan
18-09-2024, 12:23 IST
www.herzindagi.com

குழந்தைகள்

    பல குழந்தைகள் தங்கள் செல்போன்களை பார்ப்பதற்கு அதிக நேரம் செலவிடுகிறார்கள், இது அவர்களின் அறிவுசார் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். இதைப் போக்க அவர்கள் வீட்டிற்குள் குழந்தைகளை விளையாட வைக்க இந்த ட்ரிக்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க

Image Credit : google

    பொதுவாக, அதிக மழை அல்லது வெயில் இருந்தால், குழந்தைகள் வீட்டிற்குள் தான் விளையாட முடியும். அத்தகைய சூழ்நிலைகளில் விளையாடுவதற்கு பெற்றோர்கள் சில வழிகளை உருவாக்கித் தர வேண்டும்.

Image Credit : google

புதிர்கள்

    மிகவும் எளிதான மற்றும் வேடிக்கையான பலகை விளையாட்டுகள் மற்றும் புதிர்கள், ஜிக்சா புதிர், லுடோ மற்றும் யூனோ கார்டுகள் போன்ற விளையாட்டுகளை குடும்ப உறுப்பினர்களுடன் விளையாட விடுங்கள் இதனால் குழந்தைகளின் பேச்சுத் திறன் மற்றும் கற்றலில் உள்ள ஆர்வம் அதிகரிக்கும்.

Image Credit : google

புதையல் விளையாட்டு

    வீட்டிற்குள் புதையல் விளையாட்டு தயார் செய்யலாம். மிக எளிமையாக, ஸ்பூன், சாக்ஸ் மற்றும் எந்த பொம்மையும் எங்காவது மறைத்து வைத்து பின்னர் அதைக் கண்டுபிடிக்க துப்புகளை எழுதுங்கள்.

Image Credit : google

சமையல்

    சில குழந்தைகளுக்கு சமையலில் மிகவும் ஆர்வமாக கொண்டவர்களாக இருப்பார்கள் அவர்களை கேக், குக்கீகள் போன்றவற்றை செய்ய உதவுமாறு கூறலாம்.

Image Credit : google

வீடு கட்டுவோம்

    வீடு கட்டுவது என்பது முன்னொரு காலத்தில் எல்லோரும் விளையாடுவதுதான். வீட்டில் தயாரிக்கப்பட்ட படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகளுடன் குழந்தைகளை வீட்டில் விளையாட ஊக்குவிப்பது அவர்களின் கற்பனை திறனை அதிகரிக்கும்.

Image Credit : google

கைவினை

    கலை மற்றும் கைவினைப் பொருட்களை விரும்பும் குழந்தைகளுக்கு அதைச் செய்யக் கற்று கொடுக்கலாம். வீட்டில் உள்ள விஷயங்களை எளிதாக செய்யலாம். இதில் பெயிண்டிங் மற்றும் பேப்பர் தயாரித்தல் போன்ற விஷயங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம்.

Image Credit : google

நடனம்

    விடுமுறையில் உள்ள குழந்தைகளை வீட்டில் டிவிகளில் பாடல்களை போட்டு அதற்கு நடனம் ஆடுமாறு கூறுங்கள். மேலும் பெற்றோரும் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

Image Credit : google