பெண்களே பிரச்சனையா? யோசிக்காமல் 181 க்கு டயல் பண்ணுங்க!


Jansi Malashree V
06-03-2024, 11:24 IST
www.herzindagi.com

    மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ், பிரச்சனையில் இருக்கின்ற பெண்களுக்கு உதவுவதற்காக இலவச உதவி எண் 181 என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.

24 மணி நேர அழைப்பு:

    பெண்களுக்கு அலுவலகம் மற்றும் வீடுகளில் உள்ளவர்களால் வன்முறைக்கு ஆளாகும் போது தயக்கம் இல்லாமல் 24 மணி நேரமும் 181 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

உடனடி தீர்வு:

    பிரச்சனையில் உள்ளதாக 181 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் பெண்களை காவல்துறையின் மூலம் மீட்கப்பட்டு உடனடி தீர்வு காணப்படும்.

குழந்தைத் திருமணம்:

    பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியாக பிரச்சனைகளையும் 181 ன் மூலம் புகார் அளிக்க முடியும்.

இலவச அழைப்புகள்

    24/7 என்ற அடிப்படையில் 24 மணி நேரமும் இலவசமாக உதவி மையம் இயங்கி வருகிறது. பெரும்பாலான பெண்கள் உதவி மையத்தில் செயல்படுவதால் பிரச்சனைகளை தயக்கம் இன்றி கூறலாம். தொலைப்பேசி அழைப்புகள் ரகசியம் காக்கப்படுகிறது.

காது கேளாமை

    பாலியல் வன்முறைக்கு அதிகளவில் மாற்றுத்திறனாளி பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். காது கேளாமை அல்லது காது கேட்பதில் சிரமம் உள்ளவர்களின் குறையைக் கேட்க நேரலை உரையாடல் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இதற்காக நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஆலோசகர்கள் உள்ளனர்.

    இதுவரை 181 என்ற இலவச எண்ணிற்கு குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, அலுவலகத்தில் பாலியல் துன்புறுத்தல் போன்ற வழக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளது.