இந்த தேவையில்லாத செலவுகள் உங்கள் பர்ஸை காலி பண்ணும்!


Alagar Raj AP
07-08-2024, 14:54 IST
www.herzindagi.com

    நீங்கள் செய்யும் சில தேவையில்லாத செலவுகள் உங்கள் நிதி ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். அப்படி நீங்கள் உங்கள் பர்ஸை காலி பண்ண வேண்டாம் என்று நினைத்தால் இந்த பதிவில் உள்ள தவறுகளை செய்யாதீர்கள்.

இன்ஃப்ளுயன்சர்களின் விளம்பரம்

    இன்ஸ்டாகிராம் ரிலீஸ், யூடியூப் ஷார்ட்ஸ் போன்றவற்றில் இன்ஃப்ளுயன்சர்கள் கூறும் பொருட்களை உங்களுக்கு தேவை இருக்கோ இல்லையோ அதை பற்றி முழுவதும் தெரியாமல் வாங்குவது உங்கள் பணத்தை கரியாக்கி விடும்.

ஓடிடி சந்தா

    ஓடிடி தளங்களுக்கு நீங்கள் பயன்படுத்தாமல் அதற்கு சந்தா பணம் செலுத்துவது உங்கள் பணத்தை விரயமாக்கும்.

மற்றவர்களை கவர..

    மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக புது ஆடைகள், உபகரணங்கள் போன்றவற்றில் பணத்தை செலவு செய்வது பணத்தை காலி செய்யும்.

பிராண்ட் பெயர்

    ஏதாவது ஒரு தயாரிப்பின் பிராண்ட் பெயருக்காக, அதிகம் பணம் கொடுத்து அதை தேவையில்லாமல் வாங்குவது பணத்தை வீணடிக்கும் செயலாகும்.

உணவகத்தில் சாப்பிடுவது

    அடிக்கடி உணவகத்தில் சாப்பிடுவது, வார இறுதியில் பார்ட்டி பண்ணுவது போன்ற செயல்களும் உங்கள் பணத்தை காலி செய்யும்.

புது ஆடைகள்

    அடிக்கடி புது ஆடைகள் வாங்குவது என்பது உங்கள் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்கிறீர்கள்.