ஒரே நேர்கோட்டில் 7 கிரகங்களை இந்த நாளில் பார்க்க மறக்காதீங்க
Alagar Raj AP
25-02-2025, 13:57 IST
www.herzindagi.com
வானியல் நிகழ்வு
இந்த ஆண்டின் முக்கிய வானியல் நிகழ்வுகளின் ஒன்றான கிரக அணிவகுப்பு பிப்ரவரி 28ம் தேதி வானத்தை வசீகரிக்க உள்ளது.
கிரக அணிவகுப்பு
சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களும் சூரியனை வெவ்வேறு நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றது. இப்படி சுற்றும் கிரகங்கள் பூமியில் இருந்து பார்ப்பதற்கு ஒரே நேர் கோட்டில் காட்சியளிக்கும் நிகழ்வு தான் ‘கிரக அணிவகுப்பு’ என்று அழைக்கப்படுகிறது.
ஏழு கிரகங்கள்
சூரிய குடும்பத்தில் உள்ள, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் நிகழ்வு நடக்கவுள்ளது.
எப்போது பார்க்கலாம்?
கிரக அணிவகுப்பு நிகழ்வை பிப்ரவரி 28ம் தேதி முதல் பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த அரிய நிகழ்வை மார்ச் 3ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
எப்படி பார்க்கலாம்?
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும். அதேபோல் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்களை பார்க்க தொலைநோக்கி தேவைப்படும்.
எந்த திசையில் பார்க்க வேண்டும்?
செவ்வாய் கிரகம் கிழக்கிலும், வியாழன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை தென்கிழக்கிலும் பார்க்கலாம். வீனஸ், நெப்டியூன் மற்றும் சனி ஆகிய கிரகங்களை மேற்கு திசையில் பார்க்கலாம் என்றும் வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடுத்த கிரக அணிவகுப்பு
மீண்டும் இதேபோன்று ஏழு கிரக அணிவகுப்பு 2040 ஆம் ஆண்டு நிகழும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.