டிரெண்டிகில் உள்ள பொங்கல் பானை,கரும்பு கோலம்


S MuthuKrishnan
13-01-2025, 09:28 IST
www.herzindagi.com

    பொங்கல் அன்று அனைவரின் வீடுகளின் வாசலில் பொங்கல் பானை, கரும்பு கோலம் போடுவது தான் தமிழர்களின் சிறப்பு, உங்கள் வீட்டு வாசலை அழகுபடுத்தும் பொங்கல் பானை கோலம் இதோ

    வீட்டு வாசலில் கோலம் போடுவது நமது பண்பாடு. இது வீட்டிற்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வருகிறது. விசேஷ நாட்களில் இந்த கோலங்கள் இன்னும் வண்ணமயமாக, பெரிதாக, வித்தியாசமாக, அழகாக இருக்கும்.

    மார்கழி மாதம் கோலங்களுக்கான மாதம். தமிழகத்தில் பல இடங்களில் மார்கழி கோலங்களுக்கான போட்டிகளும் நடப்பதுண்டு.

    அரிசி மாவைப் பயன்படுத்தி ரங்கோலி கோலம் போடப்படுகிறது. நாம் தமிழகத்தில் கோலம் என கூறுவதை வட மாநிலங்களில் ரங்கோலி என கூறுகிறார்கள். இது வண்ண மயமாக இருக்கும். இதில் வண்ண பொடிகள், அரிசி, பூ மற்றும் பிற இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்த வகையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது வீட்டிற்கு செல்வத்தையும், செழிப்பையும், நேர்மறை சிந்தனைகளையும் அளிப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் பல வழிகளில் மேம்படுத்துகின்றது.

குறிப்பு

    கோலப்பொடி நன்கு வெண்மை நிறமாக தேர்வு செய்யுங்கள், மேலும் கோலப்பொடியுடன் கார்ன் மாவு சிறுது சேர்ப்பது உங்கள் வெள்ளை கோலமாவை மேலும் எடுத்துக்கட்டும்.