குழந்தைகள் நேர்மையாக வளர கற்றுக் கொடுக்க வேண்டிய சில டிப்ஸ்..!


G Kanimozhi
20-08-2024, 11:40 IST
www.herzindagi.com

குழந்தைகளை நேர்மையாக வளர்க்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்

    உதாரணமாக இருங்கள்

      குழந்தைகளை நேர்மையாக இருக்க வேண்டும் என்று சொல்வதை தவிர்த்து பெற்றோர்கள் நேர்மையாக உதாரணமாக இருக்க வேண்டும்.

    திறந்த உரையாடல்

      உங்கள் வீட்டில் இருக்கும் வளரும் குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை ஓப்பனாக வெளிப்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும்.

    அனுதாபம் காட்ட சொல்லிக் கொடுங்கள்

      வளரும் குழந்தைகளுக்கு மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடக்க சொல்லிக் கொடுப்பது அவசியம்.

    தெளிவான எதிர்பார்ப்பு

      உங்கள் வீட்டில் இருக்கும் வளரும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்கள் கற்க வேண்டிய மதிப்புகள் குறித்து உங்கள் தெளிவான எதிர்பார்ப்புகளை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.

    நேர்மை பாராட்ட வேண்டும்

      உங்கள் குழந்தை ஏதேனும் ஒரு விஷயத்தில் நேர்மையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ளும் போது அவர்களை மனம் திறந்து பாராட்டுவது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும்.