உங்கள் குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை நிறுத்த இதை பண்ணுங்க..!
Alagar Raj AP
29-02-2024, 18:09 IST
www.herzindagi.com
பதட்டமாக இருக்கும் போது அல்லது சுயநினைவின்றி இருக்கும் போது குழந்தைகள் நகங்களை கடிப்பார்கள். அல்லது சில குழந்தைகளுக்கு நகம் கடிப்பது என்பது பழக்கமாகவே இருக்கும். இந்த பழக்கத்தை எப்படி தடுப்பது என்ற குறிப்பை காண்போம்.
நகங்களை வெட்டி விடுங்கள்
குழந்தைகளின் நகங்களை வெட்டி விட்டால் பாக்டீரியா மற்றும் அழுக்குகள் உங்கள் குழந்தையை பாதிக்காமல் இருக்கும்.
குழந்தைகளின் கவனத்தை மாற்றவும்
உங்கள் குழந்தை நகங்களை கடிக்கும் போது வண்ணம் தீட்டுதல், விளையாடுதல் அல்லது நடனமாடுதல் போன்ற செயல்களில் கவனத்தை திருப்புங்கள்.
நெயில் பாலிஷ் பயன்படுத்துவது
குழந்தையின் விரல்களில் நெயில் பாலிஷ் பூசினால் நெயில் பாலிஷின் கசப்பு சுவை காரணமாக நகம் கடிப்பதை குழந்தைகள் நிறுத்தி விடுவார்கள்.
சொல்லி புரிய வையுங்கள்
நகங்களை கடிப்பதால் அதில் உள்ள அழுக்குகள், பாக்டீரியாக்கள் போன்றவை வாய்க்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என குழந்தைகளிடம் சொல்லி புரிய வைக்கலாம்.
பரிசு வழங்குவது
உங்கள் குழந்தை நகங்களை கடிக்காமல் இருக்கும் நாட்களை குறித்து வைத்து, அதை அவர்களிடம் பெருமையாக கூறி பரிசு வழங்கி பாராட்டலாம். இது நகம் கடிப்பதை தவிர்க்க குழந்தைகளை மேலும் ஊக்குவிக்கும்.
நகம் கடித்ததற்காக குழந்தைகளை நச்சரிக்காதீர்கள் அல்லது தண்டிக்காதீர்கள். அதற்கு பதிலாக, சரியான நடவடிக்கைகளுடன் அவர்களுக்கு உதவுவது பலனை அளிக்கும்.