NPS வாத்சல்யா: குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோரா நீங்கள்? இந்த திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க !


S MuthuKrishnan
19-09-2024, 09:51 IST
www.herzindagi.com

NPS வாத்சல்யா

    NPS வாத்சல்யா, ஓய்வூதியக் கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகச் சேமிக்க முடியும் மற்றும் இந்தத் திட்டத்திற்கு கூட்டு வட்டி கிடைக்கிறது, வருமானம் நன்றாக வளரும்.

Image Credit : google

சேமிப்பு தொகை

    NPS வாத்சல்யா திட்டத்தில் பெற்றோர்கள் ஆண்டுக்கு 1,000 ரூபாய் முதல் சேமிக்கலாம். குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு ரூ.50,000 செலுத்தினால் அந்த குழந்தைக்கு 18 வயதாகும் போது ரூ.25 லட்சம் கிடைக்கும்.

Image Credit : google

விண்ணப்பிப்பதற்கான தகுதி:

    நாட்டிலுள்ள அனைத்து 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்காகவும் விண்ணப்பிக்கலாம்.

Image Credit : google

NPS வாத்சல்யா கணக்கை எங்கே திறப்பது?:

    வங்கிகள், இந்திய அஞ்சல் அலுவலகம் போன்றவற்றின் மூலம் NPS வாத்சல்யா கணக்கைத் திறக்கலாம். ஆன்லைன் தளத்தின் மூலமாகவும் NPS திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

Image Credit : google

தேவையான ஆவணங்கள்:

    அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் பாதுகாவலரின் KYC.குழந்தையின் பிறந்த தேதி சான்று.

Image Credit : google

    குழந்தைகளுக்கு 18 வயது ஆனதும் கணக்கு சாதாரண NPS கணக்காக மாற்றப்படும். அவர்கள் 75 வயதாகும் வரை தங்கள் NPS கணக்கில் தொடர்ந்து பங்களிக்கலாம்.

Image Credit : google