பெண்ணுரிமையே சமூகத்தின் விடுதலை என்ற பெரியாரின் கூற்றின் படி, இந்தியாவில் உள்ள பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.
சொத்துரிமை
ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு கொடுக்க வேண்டும் என 1929 ல் பெரியார் போன்ற சமூக சீர்திருத்த வாதிகள் முன் வைத்தனர். இதன் அடிப்படையில் 1989 ல் அனைத்து சொத்துக்களிலும் பெண்களுக்கு பங்கு உள்ளது என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது.
வீட்டு வன்முறை சட்டம்
திருமணத்திற்குப் பிறகு கணவரின் குடும்பத்தினால் துன்புறுத்தப்பட்டாலும், சொத்தில் பங்கு இல்லை என்றாலும் இந்து வாரிசு சட்டம் 195 மற்றும் இந்து திருமண சட்டம் 1955 பிரிவு 27 வழக்குப் பதிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உள்ளது.
வரதட்சணை தடுப்பு சட்டம்
இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் ஏற்பட்ட பெண்களின் உயிரிழப்புகளைத் தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது. வரதட்சணை சட்டம் 1961, 30 4 பி, ஐபிசி பிரிவு 498 ஏ ன் படி வரதட்சணை கேட்கும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டம்
பெண்கள் தங்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆண்கள் மீது புகார் அளித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும் பெண்கள் தற்காப்பிற்காக செய்யும் கொலைகள் குற்றங்களாக எடுத்துக் கொள்ளப்படாது.
சம ஊதிய சட்டடம் 1976.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிபுரிகிறார்கள். ஆனால் அவர்களுக்காக ஊதியம் என்பது குறைவாக இருக்கும். இருவருக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை சம ஊதிய சட்டம் வலியுறுத்துகிறது.
பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் 2013
அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான குற்றங்களைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளது. குறிப்பாக அலுவலகத்தில் இன்டர்னல் கமிட்டி செயல்படும். இதன் மூலம் அவர்கள் புகார் அளித்துக் கொடுக்க முடியும்.
இது போன்று பெண்களைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மட்டுமல்ல, எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது.