தொழிலாளர் தினத்தில் இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கும் சென்னை!
Alagar Raj AP
30-04-2024, 18:00 IST
www.herzindagi.com
18 மணி நேர வேலை
முதலாளித்துவம் தலையோங்கி இருந்த 1880 காலகட்டத்தில் உலகம் முழுவதும் 18 மணி நேரம் வரை தொழிலாளர்கள் கட்டாய பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதை எதிர்த்து தொழிற்புரட்சி ஏற்பட்ட நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன.
காரல் மார்க்ஸின் குரல்
தொடர்ந்து போராட்டங்கள் வலுப்பெற 1889 இல் உலக தொழிலாளர்களின் சர்வதேச கூட்டம் பாரிசில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காரல் மார்க்ஸ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை மே 1 தொழிலாளர் தினமாக அறிவித்து விடுமுறை அளிக்க வேண்டுமென கோசத்தை முன்வைத்தார்.
தொழிலாளர் தினம்
இதன் விளைவாக ஒவ்வொரு நாடுகளிலும் மே 1 தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மே தின பொதுக்கூட்டம்
தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதி என்று அழைக்கப்படும் சிங்காரவேலர் தலைமையில் இந்தியாவில் முதல்முறையாக மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மே தின விழா
1923ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையில் மே தின விழா நடைபெற்றது.
இந்தியாவின் முதல் மே தினம்
அதே சமயம், திருவான்மியூரில் மே தின கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.
உழைப்பாளர் சிலை
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக முன்னாள் முதல்வர் காமராஜர் இந்த உழைப்பாளர் சிலையை நிறுவ உத்தரவிட்டார்.