அலுவலகத்தில் கடுப்பேத்தும் சக ஊழியர்களை கையாள்வதற்கான வழிகள்


Alagar Raj AP
14-10-2024, 13:57 IST
www.herzindagi.com

    அலுவலகத்தில் உங்களிடம் இனிமையாக பேசி, உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களை விமர்சித்து எதிர்மறையாக பேசும் போலி முகம் கொண்ட ஊழியர்களை பார்த்திருப்பீர்கள். இவர்களை அலுவலகத்தில் எப்படி சமாளிப்பது என்பதற்கான சில குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.

எல்லைகளை அமைக்கவும்

    அலுவலகத்தில் உங்களுக்கென்று ஒரு எல்லையை அமைத்துக் கொள்ளுங்கள். அதற்குள்ள மட்டும் உங்கள் மரியாதைக்குரிய மற்றும் தொழில்முறை உறவை உருவாக்க வேண்டும்.

பழிவாங்குவதை தவிர்க்கவும்

    சக ஊழியர் நமக்கு இப்படி மோசம் செய்து விட்டார் அதற்கு நாமும் அதே போல் அவரை பழிவாங்க வேண்டும் என்ற இருக்க கூடாது. இதனால் பிரச்சனை மேலும் மேலும் பெரிதாகும்.

புகார் தெரிவியுங்கள்

    சக ஊழியர்கள் உங்களை பற்றி தவறாக பேசினாலோ அல்லது தவறாக நடந்துகொண்டாலோ அதை குறித்து உங்கள் மேலாளருடன் ஆலோசித்து தீர்வு காணுங்கள்.

கிசுகிசுக்களை தவிர்க்கவும்

    அலுவலகத்தில் உங்களை பற்றி யாரும் கிசுகிசு பேசாதவாறு நடந்துகொள்ளுங்கள். கிசுகிசு பேசுவதற்கான வாய்ப்பை அமைப்பது உங்களை விமர்சிக்கும் ஊழியர்களுக்கு சாதகமாக அமையும். அதேபோல் நீங்களும் யாரை பற்றியும் கிசுகிசு பேசாதீர்கள்.

வேலையில் கவனம் செலுத்துங்கள்

    உங்களை கடுப்பேத்தும் ஊழியர்களால் உங்களுக்கு கவனச்சிதறல்கள் அல்லது இடையூறுகள் இருந்தாலும் அதற்கு செவிசாய்க்காமல் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் உங்கள் நேரமும் ஆற்றலும் வீணாகும்.

ஆதரவை உருவாக்கவும்

    போலி சக ஊழியரை சமாளிக்க சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கு நம்பகமான சக ஊழியர்களின் ஆதரவை பெறுங்கள். கடுப்பேத்தும் ஊழியர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.