வங்கி ஊழியராக 12 ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்க வேண்டும்?
Alagar Raj AP
28-03-2025, 15:08 IST
www.herzindagi.com
வங்கித்துறை
இந்தியாவின் மேம்பட்ட துறைகளில் வங்கித்துறையும் ஒன்று. வேலைப் பாதுகாப்பையும் நீண்ட கால தொழில் வளர்ச்சிக்கான சாத்தியத்தையும் வழங்குவதால் வங்கித் துறை நிலையான துறையாகக் கருதப்படுகிறது. அதனால் பலர் வங்கியில் ஊழியராக சேர முயற்சிக்கின்றனர்.
என்ன படிக்க வேண்டும்?
வங்கித் துறையில் பணியாற்ற 12 ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
இளங்கலை பட்டம்
வங்கி ஊழியராக வேண்டுமென்றால் நிதி, கணக்கியல், வணிகம், கணிதம் அல்லது பொருளாதாரம் போன்ற தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெறுவது வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.
முதுகலை பட்டம்
வங்கியில் சிறப்பு பதவிகள் அல்லது உயர் பதவிகளுக்கு, MBA அல்லது பிற தொடர்புடைய முதுகலை படிப்புகளை பெறுவது கூடுதல் பலமாக அமையும்.
திறன் மேம்பாடு
பொது அறிவு, ஆங்கிலப் புலமை, அடிப்படை கணினி திறன்கள், வாடிக்கையாளர் சேவை திறன்கள், நிதி பகுப்பாய்வு, பணத்தை கையாளும் திறன், கணக்கியல் திறன்கள் ஆகிய திறன்களை வளர்த்துக்கொள்வது உங்களை நேர்காணலில் திறன்மிக்க நபராக வெளிப்படுத்தும்.
வங்கி தேர்வு
பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகளில் நடத்தப்படும் தேர்வுகள் மூன்று அல்லது நான்கு கட்டங்களாக நடைபெறும். இதில் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், தனிப்பட்ட நேர்காணல் ஆகிய தேர்வு செயல்முறைகள் அடங்கும்.
வங்கி பதவி
வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு உங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். அதன் பின் உங்கள் செயல்திறனை பொறுத்து உங்களுக்கு ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.