தந்தையர் தினத்தில் அப்பாவை சிறப்பாக உணர வைக்க இதை செய்யுங்க!
Alagar Raj AP
11-06-2024, 16:18 IST
www.herzindagi.com
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச தந்தையர் தினம் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் தந்தையை சிறப்பாக உணர வைக்க உதவும் சில குறிப்புகளை இங்கே காணலாம்.
பிடித்த உணவைச் சமைக்கலாம்
உங்கள் தந்தைக்கு பிடித்தமான காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவை சமைத்து அவருக்கு பரிமாறலாம். சமைக்க தெரியாவிட்டால் அவருக்குப் பிடித்த உணவை உணவகத்தில் ஆர்டர் செய்யுங்கள்.
பிக்னிக் அழைத்து செல்லுங்கள்
நாள் முழுவதும் குடும்பத்திற்காக உழைக்கும் தந்தைக்கு சற்று நிம்மதியாக உணர செய்யும் இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு பிக்னிக் அழைத்து செல்லலாம்.
கடிதம் எழுதுங்கள்
உங்கள் தந்தை மீது நீங்கள் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக இதயப்பூர்வமான கடிதத்தை எழுதி தந்தைக்கு கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் கடிதம் நீங்கள் உங்கள் தந்தை மேல் வைத்துள்ள பாசத்தை அவருக்கு உணர்த்தும்.
பரிசு கொடுங்கள்
உங்களுக்கு தந்தையிடம் இல்லாத அவருக்கு பயன்படும் ஏதாவது பொருளை பரிசாக வழங்கலாம்.உங்களுக்கு தந்தையிடம் இல்லாத அவருக்கு பயன்படும் ஏதாவது பொருளை பரிசாக வழங்கலாம்.
ஸ்கிராப்புக் செய்யுங்கள்
உங்கள் தந்தையின் இளம் வயது புகைப்படங்களை வைத்து ஸ்கிராப்புக் அல்லது புகைப்பட ஆல்பத்தை உருவாக்கவும். இது அவர் வாழ்நாளில் அனுபவித்த பழைய சிறந்த தருணங்களை மீட்டெடுக்க உதவும்.
ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள்
உங்கள் தந்தைக்கு பிடித்த திரைப்படத்தைப் பார்ப்பது, ஷாப்பிங் செய்யவது, கேம்ஸ் விளையாடுவது என்று உங்கள் தந்தையுடன் ஒன்றாகத் தரமான நேரத்தை செலவிடுங்கள்.