திருமணத்திற்கு முன் தம்பதியினர் ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள வேண்டிய நிதி விஷயங்கள்
Alagar Raj AP
28-03-2024, 12:20 IST
www.herzindagi.com
கடன்
உங்களில் ஒருவருக்கு கடன் இருந்தால் ஒன்றாக வாழ முடியாது என்று அர்த்தமில்லை. அதைப் பற்றி உங்களிடையே விவாதிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் இது உங்கள் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பில்கள்
மின்சார கட்டணம், சமையல் எரிவாயு போன்ற இதர பில்களை எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பதை முடிவெடுத்துக் கொள்ளுங்கள். இதில் உங்கள் துணை என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்க்க இது உங்களுக்கு உதவும்.
கிரெடிட் ஸ்கோர்
ஒருவருக்கொருவர் கிரெடிட் ஸ்கோர்களை தெரிந்து கொள்ளுங்கள். இதில் உங்கள் துணை வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சேமிப்பு
உங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு சேமிப்பது அவசியமான ஒன்று. அப்படி சேமிப்பதற்கு இருவரும் கூட்டாக சேமிக்க விருப்பமான அல்லது தனித்தனியாக சேமிக்க விருப்பமா என்று உங்கள் துணையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
வேலையின்மை
உங்களில் ஒருவர் வேலை செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் நிதி சுமையை எப்படி சமாளிப்பது என்று திட்டமிடுங்கள். இந்த வகையான விஷயத்தைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம்.
இலக்கு
தம்பதியினர் ஒருவருக்கொருவர் ஒரே இலக்குகளை கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் ஒரே திசையில் செயல்பட்டால் மட்டுமே உங்களின் நீண்ட கால திட்டங்களை அடைய முடியும்.
திருமணத்திற்கு முன் உங்கள் துணையிடம் இந்த விஷயங்களை கேட்டு அவர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்வது திருமணத்திற்கு பிந்தைய நிதி பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.