நிர்மலா சீதாராமனின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு விவரம்
Alagar Raj AP
31-01-2025, 14:20 IST
www.herzindagi.com
நிர்மலா சீதாராமன்
முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனுக்கு உள்ளது. தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்திய நிதியமைச்சராக பதவி வகிக்கும் நிர்மலா சீதாராமனின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு என்ன என்பதை பார்க்கலாம்.
மாத சம்பளம்
கேபினட் அமைச்சராக நிர்மலா சீதாராமனுக்கு மாதத்திற்கு ரூ.1,00,000 அடிப்படை சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
உதவி தொகைகள்
கள உதவித் தொகையாக ரூ.70,000 ரூபாய், உத்தியோகபூர்வ உதவித் தொகை ரூ.60,000 மற்றும் விருந்தோம்பல் உதவித் தொகையாக ரூ.2,000 ரூபாய் வழங்கப்படும்.
வசதிகள்
அரசு பங்களா மற்றும் கார், அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் என அனைத்து வசதிகளும் நிர்மலா சீதாராமனுக்கு உள்ளன.
சொத்து மதிப்பு
இவரின் சொத்து மதிப்பு ரூ.2.53 கோடியாகும். இதில் ரூ.1.87 கோடி அசையா சொத்தாகவும், ரூ.65.55 லட்சம் அசையும் சொத்தாகவும் உள்ளது.
வீடு மற்றும் நிலம்
நிர்மலா சீதாராமனுக்கும் அவரது கணவருக்கும் ஹைதராபாத் அருகே ரூ.1.7 கோடி மதிப்புள்ள ஒரு வீடு உள்ளது. மேலும் இவருக்கு தெலுங்கானா மாநிலம் குன்ட்லூர் கிராமத்தில் ரூ.17.08 லட்சம் மதிப்புள்ள சொந்த நிலம் உள்ளது.
ஆபரணங்கள்
இவரிடம் ரூ.19.4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.3.98 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களும் இருக்கிறதாம்
வங்கி சேமிப்பு மற்றும் முதலீடுகள்
வங்கிக் கணக்குகளில் ரூ.35.52 லட்சம் பணம் உள்ளது. கூடுதலாக மியூச்சுவல் ஃபண்ட், பிபிஎப் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்துள்ளார்.
இந்தத் தகவல், 2024 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் தனது சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தபோது வெளியான செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டவை.