குழந்தைகள் வெளியில் விளையாடினால் இனி நோ சொல்லாதீங்க! ஏன் தெரியுமா?
Jansi Malashree V
22-03-2024, 20:44 IST
www.herzindagi.com
குழந்தைகளை வீட்டிற்கு உள்ளே அடைத்து வைக்கும் போது மன உளைச்சல் அதிகரிப்பதோடு, உடலுக்குத் தேவையான ஆற்றலை பெற முடியாது. எனவே முடிந்தளவிற்கு உங்களது கண்காணிப்புடன் விளையாட சொல்லுங்கள்.இதன் மூலம் ஏராளமான நன்மைகளை உங்களது குழந்தைகள் பெற முடியும்.
எடை நிர்வகித்தல்:
குழந்தைகளை ஜாக்கிங், வாக்கிங், ஜம்பிங் போன்ற வெளிப்புற உடல் செயல்பாடுகளை மேற்கொள்ள சொல்லும் போது, உங்களின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை நிர்வகிக்கவும் முடியும்.
வைட்டமின் டி பெறுதல்:
வெளிப்புற விளையாடுகளில் உங்களது குழந்தைகளை ஈடுபடுத்தும் போது உடலுக்குத் தேவையான வைட்டமின் டி யை பெறுவதற்கு உதவியாக இருக்கும். இதோடு எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் மனநிலையை ஒழுங்குப்படுத்துவதற்கு வைட்டமின் டி முக்கியமானதாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு:
வெயில், மழை போன்ற அனைத்து பருவ காலங்களிலும் வெளியில் வேலை செய்யும் போது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும். இதனால் எவ்வித தொற்றுப்பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
மன அழுத்தத்திற்கு தீர்வு:
பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பள்ளி மற்றும் மதிப்பெண் குறித்த மன அழுத்தங்கள் ஏற்படும். நீங்கள் வெளிப்புற விளையாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும் போது மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும்.
குழந்தைகளை வெளியில் விளையாட சொல்வதன் மூலம் இது போன்ற ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதோடு, நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவியாக இருக்கும்.