உங்க வீட்டு குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்துறீங்களா, அப்போ இதையெல்லாம் நோட் பண்ணிக்கோங்க!


S MuthuKrishnan
28-08-2024, 09:12 IST
www.herzindagi.com

    குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தப்படும் பொழுது அவர்களுடைய மென்மையான சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அந்த சரும பாதிப்பு என்பது எரிச்சலை ஏற்படுத்தி அரிப்பை உண்டாக்குவதால் குழந்தை அசவுகரியமாக உணர்வதன் காரணமாக அழுகின்றனர்.

Image Credit : google

    குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும், பாதுகாப்பான முறையிலும் டயாப்பரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

Image Credit : google

    குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை மட்டுமே டையப்பர் பயன்படுத்தலாம். அதற்குப் பிறகு டாய்லெட் பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்தி விடுவது நல்லது.

Image Credit : google

    வெளியூர்களுக்கு செல்லும் பொழுது அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது மட்டும் குழந்தைகளுக்கு டயாப்பரை பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

Image Credit : google

    முடிந்தவரை பகல் நேரங்களில் டயாப்பரை பயன்படுத்தாமல் இரவு நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம். வாசனை கொண்ட டயாப்பர்கள் சுகாதாரத்திற்கு ஏற்றதாக இல்லாமல் போகலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Image Credit : google

    ஒருமுறை பயன்படுத்திவிட்டு அந்த டயாப்பரை நான்கு மணி நேரம் கழித்து அகற்றும் பொழுது குழந்தை மலம் அல்லது சிறுநீர் கழிக்கவில்லை என்பதற்காக அதே டயாப்பரை மீண்டும் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Image Credit : google

    பயன்படுத்தப்பட்ட டயாப்பர்களை தகுந்த முறையில் அப்புறப்படுத்த வேண்டும். குழந்தைகள் அவற்றை வைத்து விளையாடும் வகையில் வீடுகளில் போட்டு வைக்கக்கூடாது.

Image Credit : google

    குழந்தைகளுடைய சருமம் மிகவும் உணர்வு திறன். கொண்டது அதனால் டயாப்பரில் உள்ள பல்வேறு ரசாயன பொருட்கள், துணி போன்றவை குழந்தைகளின் சருமத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை. அதனால் குழந்தையின் சரும நிலை பற்றி அறிந்து அதற்கு ஏற்ற டயாப்பரை பயன்படுத்துவது நல்லது.

Image Credit : google