உங்க EX லவ்வரை மறக்க எவ்வளவு காலம் ஆகும் தெரியுமா?


Alagar Raj AP
09-04-2025, 14:55 IST
www.herzindagi.com

காதல் பிரேக்அப்

    காதல் பிரேக்அப் ஆவது மனதில் நீங்கா வடுவையும், அனுபவத்தையும் விட்டு செல்லும். ஒருவருடன் நீங்கள் ஒன்றாகக் கற்பனை செய்த எதிர்காலம் இனி இல்லை என்று ஆகும் போது அதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கும்.

முன்னாள் காதல்

    காதல் முறிவுக்கு பிறகு முன்னாள் காதலன் அல்லது காதலியை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன் என்று பிரேக்அப் ஆனவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் இதற்கு மாற்றாக அமைந்துள்ளது சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு அறிக்கை.

ஆய்வு தகவல்

    EX லவ்வரை மறக்க எவ்வளவு காலம் என்று இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் 'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்

    இந்த ஆய்வில் மொத்தம் 328 ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் சராசரி வயது 30, பங்கேற்பாளர்களில் 57 சதவீதம் பேர் பெண்கள்.

பல வருட காதல் உறவு

    அனைத்து பங்கேற்பாளர்களும் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை காதல் உறவில் இருந்து பிரேக்அப் ஆனவர்கள்.

4.18 ஆண்டுகள்

    முன்னாள் காதலருடனான உணர்ச்சிகள் பாதியளவு மறைய சுமார் 4.18 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகள்

    பெரும்பாலான காதலர்களுக்கு, தன் முன்னாள் காதலருடனான உணர்ச்சிகள் முழுவதும் 8 ஆண்டுகளுக்கு பிறகு மறைந்துவிடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.