உங்கள் குழந்தைகளிடம் இந்த 5 அறிகுறிகள் இருந்தால் அதை அலட்சியம் படுத்தாதீங்க!
Alagar Raj AP
19-04-2024, 14:23 IST
www.herzindagi.com
இன்றைய உலகில் குழந்தையாக இருப்பது எளிதல்ல. குடும்பம், சமூகம், பள்ளி வாழ்க்கை என பல வகைகளில் குழந்தைகளில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அப்படி குழந்தைகள் மன அழுத்தத்தில் இருப்பதை காட்டும் சில அறிகுறிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோபம்
கோபம் மற்றும் எரிச்சல் பெரியவர்களுக்கு சகஜம் என்றாலும் மன அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு கோபம் மற்றும் எரிச்சல் ஏற்படும்.
பசியின்மை
குழந்தைகள் வழக்கத்தை விட குறைவாக சாப்பிடுவது அல்லது அதிகம் சாப்பிடுவது எடை இழப்பு அல்லது அதிகரிப்பு போன்றவை மனச்சோர்வின் அறிகுறிகள்.
சுயவிமர்சனம்
மன அழுத்தத்தில் உள்ள குழந்தைகள் பொதுவாக அதிகம் சுயவிமர்சனம் செய்வார்கள். “நான் எதற்கும் சரிப்பட்டு வர மாட்டேன்”,
தூக்கமின்மை
வழக்கத்தை விட அதிகம் தூங்குவது அல்லது குறைவான நேரம் தூங்குவது போன்ற அறிகுறிகள் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருப்பதற்கான சாத்தியமான அறிகுறிகள்.
ஆர்வமின்மை
மன அழுத்தத்தில் உள்ள குழந்தையின் ஆற்றல் குறைவாக இருக்கும். இதனால் அவர்களுக்கு எதன் மேலும் ஈடுபாடு அல்லது ஆர்வம் இருக்காது. எந்த விஷயத்தையும் எளிதில் கைவிடலாம் அல்லது முயற்சி செய்ய மாட்டார்கள்.
உங்கள் குழந்தைகளிடம் பேசி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து அவர்களின் கண்ணோட்டத்தில் அந்த வலியை பார்த்தால் அவர்களின் மன அழுத்தத்திற்கான விடை கிடைக்கும்.