இரவு முழுவதும் அழக்கூடிய கைக்குழந்தைகளைத் தூங்க வைக்க இதைப் பின்பற்றுங்க 


Jansi Malashree V
01-01-2025, 21:03 IST
www.herzindagi.com

    காலை முழுவதும் அழாமல் இருந்தாலும் இரவு தூங்கும் போது ஏன் அழுகிறார்கள்? என்பதே புரியாத புதிராக இருக்கும். இப்படி அழும் குழந்தைகளைத் தூங்க வைக்கும் சிம்பிள் டிப்ஸ்கள்

வெளிச்சத்தைக் குறைத்தல்:

    பெரும்பாலான குழந்தைகள் அதிக வெளிச்சம் இருந்தால் தூங்குவதற்கு சிரமப்படுவார்கள். எனவே எப்போதும் அறையின் வெளிச்சத்தைக் குறைத்து வைக்கவும்.

மசாஜ்:

    குழந்தைகளைப் பார்க்க வருபவர்கள் மாறி மாறி தூக்குவதால் உடல் அலுப்பாகிவிடும். இதனால் கூட தூங்குவதற்கு சிரமப்படுவதால் கைக்குழந்தைகளின் கை, கால்களுக்கு மசாஜ் செய்யவும்.

இசை கேட்டல்:

    தூங்குவதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு பாட்டு பாடி தூங்க வைக்கலாம். அல்லது மெல்லிசையை மொபைல் அல்லது டிவியில் போட்டு தூங்க வைக்கவும்.

சிரிக்க வைக்கவும்:

    கைக்குழந்தைகளுடன் முடிந்தவரை மாலை நேரங்களில் அதிக நேரம் செலவிடுங்கள். குறிப்பாக நன்றாக சிரிக்க வைக்கும் போது அசதியில் தூங்கிவிடுவார்கள். 

    குழந்தையின் அழுகை அவர்களை மட்டுமல்ல தாய்மார்களின் உடல் நலத்தையும் பாதிக்கும் என்பதால் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்ற மறந்துவிடாதீர்கள்.