உங்களுக்கு வேகமாக கற்கும் திறன் உள்ளது என்பதற்கான 7 அறிகுறிகள்


Alagar Raj AP
18-09-2024, 15:00 IST
www.herzindagi.com

ஆர்வம்

    வேகமாக கற்றுக் கொள்பவர்களுக்கு எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது, அறிவை வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருக்கும்.

கவனித்தல்

    வேகமாக கற்கும் திறன் உள்ளவர்கள் அதிகம் கவனிப்பவர்களாக இருப்பார்கள். இதனால் புதிய கருத்துகள் அல்லது வழிமுறைகளை நுணுக்கங்களுடன் விரைவாகப் புரிந்துகொள்வார்கள்.

கேள்வி

    விரைவாக கற்றுக் கொள்பவர்களுக்கு இருக்கும் முக்கிய பண்பு கேள்வி எழுப்புதல். தங்களுக்கு தெரியாததை தயக்கம் இல்லாமல் ஒப்புக்கொண்டு அதை கேள்வி கேட்டு கற்று தெரிந்துகொள்வார்கள்.

தகவமைப்பு

    சூழ்நிலையோடு ஒன்றி இருந்தால் மட்டுமே வேகமாக கறக்க முடியும் என்பதால் விரைவாக கற்பவர்கள் தங்களை சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து கொள்வார்கள்.

சவால்கள்

    சவால்களை கண்டு அஞ்சாமல் அதை தைரியமாக எதிர் கொள்பவர்களுக்கு கற்றுக் கொள்வதில் சிரமம் இருக்காது.

சிக்கலைத் தீர்க்கும் திறன்

    விரைவாக கற்பவர்களுக்கு மூளை செயல்பாடு வேகமாக இருக்கும் என்பதால் சிக்கலைத் தீர்க்கும் திறன் அதிகம் வெளிப்படும்.

நேர மேலாண்மை

    நேரம் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்த இவர்கள் கற்றல் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நேரத்தை அதற்கு ஏற்றது போல் புத்திசாலித்தனமாக அமைப்பார்கள்.