நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க உதவும் 6 பழக்கங்கள்


Alagar Raj AP
07-04-2025, 18:27 IST
www.herzindagi.com

நினைவாற்றல்

    நமது நினைவாற்றல் கூர்மையாகவும் திறமையாகவும் இருக்க மூளைக்கு சிறப்பு கவனிப்பும் கவனமும் தேவை. அதற்கு உங்கள் வாழ்க்கை முறையில் இந்த 6 பழக்கங்களை தினமும் பின்பற்றுங்கள்.

தூக்கம்

    மூளை நினைவுகளை சரிசெய்யவும் ஒருங்கிணைக்கவும் தூக்கம் தேவைப்படுகிறது. அதனால் ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணிநேர தடையற்ற தூக்கத்தை இலக்காகக் கொள்ளுங்கள்.

சர்க்கரை உணவுகளை குறைக்கவும்

    அதிக சர்க்கரை நுகர்வு இன்சுலின் எதிர்ப்புக்கு பங்களித்து மூளையில் நரம்பு சிதைவை ஏற்படுத்தும். இதன் விளைவாக நினைவாற்றல் பாதிக்கும். அதனால் சர்க்கரை உணவுகள் உட்கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்

உடல் ரீதியான சுறுசுறுப்பு

    நடைபயிற்சி, யோகா போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள், இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நரம்பு வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

உங்கள் நினைவை சவால் செய்யுங்கள்

    புதிர்களை தீர்ப்பது, புதிய திறமைகளை கற்றுக்கொள்வது போன்ற உங்கள் நினைவாற்றல் திறனை வலுப்படுத்த உதவும் பொழுதுபோக்குகளில் ஈடுபடவும்.

வழக்கமான பரிசோதனைகள்

    உங்கள் உடலில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு போன்ற அளவுகள் சீராக இருக்கிறதாக என்பதை கண்காணிக்கவும், ஏனெனில் இவைகளில் ஏற்படும் மாற்றம் மூளையின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்.

சமூக ரீதியாக இணைந்திருங்கள்

    தனிமை மற்றும் சமூக ஈடுபாடு இல்லாமல் இருப்பது மூளை செயல்திறனை எதிர்மறையாக பாதிக்கும். எனவே மூளை செயலாக்கத்தை மேம்படுத்த மனிதர்களுடன் சமூக ரீதியாக இணைந்திருங்கள்.