உங்கள் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் 6 கண் அசைவுகள்
Alagar Raj AP
21-10-2024, 17:31 IST
www.herzindagi.com
ஓவருவர் எந்த உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார் என்பதை அவரின் கண் அசைவுகள் சுட்டிக்காட்டும். அப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சில கண் அசைவுகள் இதோ.
மேல் இடதுபுறம் பார்ப்பது
ஒருவர் உங்களிடம் பேசும் போது அவரின் கண் அசைவுகள் மேல் இடதுபுறம் இருக்கிறது என்றால் அவர் உங்களிடம் உண்மையை பேசுகிறார்.
மேல் வலதுபுறம் பார்ப்பது
ஒருவர் உங்களிடம் பேசும் போது அவரின் கண் அசைவுகள் மேல் வலதுபுறம் இருக்கிறது என்றால் அவர் உங்களிடம் பொய் பேசுகிறார்.
இடதுபுறம் பார்ப்பது
நீங்கள் ஒருவரிடம் கேள்வி கேட்கும் போது, அவரின் கண்கள் இடதுபுறம் பார்த்தல், அவர் கடந்த காலத்தை நினைவில் கொள்ள முயற்சித்து உங்களுக்கு பதில் அளிக்க போகிறார் என்று அர்த்தம்.
வலதுபுறம் பார்ப்பது
நீங்கள் ஒருவரிடம் கேள்வி கேட்கும் போது, அவரின் கண்கள் வலதுபுறம் பார்த்தல், அவர் எதிர்காலத்தை பற்றி யோசித்து உங்களுக்கு பதில் அளிக்கலாம் அல்லது கற்பனையாக எதையாவது சிந்தித்து உங்கள் கேள்விக்கு பொய் கூறலாம்.
கீழே பார்ப்பது
ஒரு உங்களிடம் பேசும் போது கீழே பார்த்து பேசினால், அவர் சோகமாகவோ, குற்ற உணர்ச்சியாகவோ, கூச்சசுபாவம் கொண்டவராகவோ அல்லது சங்கடமாகவோ உணர்கிறார் என்று அர்த்தம்.
பரந்த கண்கள்
உங்களை பார்த்ததும் ஒருவரின் கண்கள் வட்ட வடிவில் பரந்து காணப்பட்டால், அது ஆச்சரியம், உற்சாகம் அல்லது சில நேரங்களில் பயத்தின் அறிகுறியாகவும் இருக்கும்.