இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 15 அரசியல் சாசன தலைவிகளின் பங்களிப்பு


Alagar Raj AP
26-11-2024, 12:47 IST
www.herzindagi.com

அரசியலமைப்பு தினம்

    இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நாடு கொண்டாடும் வேளையில், அரசியலமைப்பு சபையில் இடம்பிடித்த பெண்கள் குறித்து காண்போம்.

15 பெண் உறுப்பினர்கள்

    1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சபையில் சுதந்திரத்திற்கு பிறகு 299 உறுப்பினர்கள் இருந்தனர். அதில் 15 பேர் பெண் உறுப்பினர்கள் ஆவர்.

பெண்களுக்கு வாக்குரிமை

    1919 ஆம் ஆண்டிற்கு பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது, இந்தியாவின் சில பகுதிகளில் பெண்கள் தேர்தல்களில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டது.

மக்களவை உறுப்பினர்கள்

    அப்படி அக்காலத்தில் இருந்த ஆணாதிக்கம், சாதிய ஒடுக்குமுறை, குழந்தை திருமணம் போன்ற சமூகத்தில் உள்ள பல தடைகளை தகர்த்து தேர்தலில் போட்டியிட்டு 15 பெண்கள் வெற்றிப் பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெயர்கள்

    1. அம்மு சுவாமிநாதன், 2. ஆனி மாஸ்கரீன், 3. பேகம் குத்ஸியா ஐஸாஸ் ரசூல், 4. தாக்ஷாயிணி வேலாயுதன், 5. துர்காபாய் தேஷ்முக், 6. ஹன்ஸா மேத்தா, 7. கமலா சௌத்ரி

பெயர்கள்

    8. லீலா ராய், 9. மாலதி சௌத்ரி, 10. பூர்ணிமா பேனர்ஜி, 11. ராஜ்குமாரி அம்ரித் கௌர், 12. ரேணுகா ரே, 13. சரோஜினி நாயுடு, 14. சுசேதா கிருபாளனி, 15. விஜயலக்ஷ்மி பண்டிட்

அம்மு சுவாமிநாதன்

    இவர்களில் கேரளாவை சேர்ந்த அம்மு சுவாமிநாதன் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி-யாக இருந்தவர்.

அரசியலமைப்பு சட்டம்

    டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு தயாரித்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு அன்று அரசியலமைப்பு சபை ஏற்றுக் கொண்டது. இதில் 15 பெண் உறுப்பினர்களின் பங்கு சமூகத்தில் பெண் வளர்ச்சிக்கு வித்திட்ட தொடக்க புள்ளியாக உள்ளது.