ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் லிஸ்ட்


Alagar Raj AP
26-06-2024, 15:27 IST
www.herzindagi.com

    பல படங்கள் தேதி குறிப்பிடாமல் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூலை வெளியீட்டை தேதியுடன் உறுதி செய்த படங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

7ஜி

    சோனியா அகர்வால் நடிப்பில் முழுக்க முழுக்க ஹாரர் படமாக தயாராகியுள்ள 7ஜி ஜூலை 5ஆம் தேதி வெளியாகிறது.

கவுண்டம்பாளையம்

    டிரைலர் வெளியாகி சமூக ரீதியாக பல சர்ச்சைகளை கிளப்பிய கவுண்டம்பாளையம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ளார்.

எமகாதகன்

    அறிமுக இயக்குனர் கிஷன் ராஜ் இயக்கத்தில் வாழ்வியல் சார்ந்து உருவாகியுள்ள எமகாதகன் ஜூலை 5ஆம் தேதி வெளியாகிறது.

இந்தியன் 2

    ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், விவேக், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்தியன் 2 படம் ஜூலை 12 வெளியாகிறது.

டெட்பூல் & வால்வரின்

    மார்வெல் கதாபாத்திரங்களான டெட்பூல் மற்றும் வால்வரின் ஒரே படத்தில் இணைந்து நடித்திருக்கும் டெட்பூல் & வால்வரின் படம் ஜூலை 26 வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

ராயன்

    நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது.