ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பராமரிக்க; இந்த 6 டிப்ஸ் ட்ரை செய்து பாருங்க
G Kanimozhi
04-04-2025, 13:47 IST
www.herzindagi.com
ஆரோக்கியமான வாழ்வு பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதோ
பசிக்கு மட்டும் சாப்பிடுங்கள்
குளிர்பானங்களை தவிர்த்து விடுங்கள் உங்களுக்கு பசிக்கும்போது பயமில்லாமல் உங்களுக்கு பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள்.
கையில் உணவு சாப்பிட்டு பழகுங்கள்
முடிந்த வரை தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டு பழகுங்கள். ஸ்பூன் பயன்படுத்துவதற்கு பதிலாக உங்கள் கை விரல்களால் சாப்பிட வேண்டும்.
ஆரோக்கியமான உணவு முக்கியம்
காய்கறிகள் பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை அதிகளவு சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தனிமையில் இனிமை
ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது தனிமையில் அமர்ந்து அமைதியாக உங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்தியுங்கள். இது உங்கள் ஆற்றலை அதிகரிக்க பெரிதும் உதவும்.
நல்ல தூக்கம்
ஒரு நபருக்கு குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் தூக்கம் மிக அவசியம். இரவு 10 மணிக்கு முன் தூங்க முயற்சி செய்யுங்கள். அதேபோல காலை ஐந்து மணிக்கு மேல் அதிக நேரம் தூங்காதிர்கள்.
மனநிலை ஆரோக்கியம்
தினமும் குறைந்தது 20 நிமிடமாவது உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி செய்ய வேண்டும். இது உங்கள் மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.