இது தெரிஞ்சா இனி தினமும் எலுமிச்சை சாறு குடிக்க மாட்டீங்க!
Alagar Raj AP
11-09-2024, 13:00 IST
www.herzindagi.com
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம் ஆகியவை உடலுக்கு நன்மை அளித்தாலும், தினமும் எலுமிச்சை சாறு குடித்தால் சில பக்க விளைவுகளும் ஏற்படும்.
வாய்ப்புண்
எலுமிச்சையில் அதிகம் காணப்படும் சிட்ரிக் அமிலம் வாயை பாதிக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் வாய் புண்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
ஒற்றைத்தலைவலி
எலுமிச்சையில் உள்ள தைரமைன் என்னும் அமினோ அமிலம் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
வயிற்று வலி
தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் வைட்டமின் சி அதிகரிக்கும், இதனால் வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகரிக்கும். இது வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிற்று வலி போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
பற்கள் சேதமடையும்
எலுமிச்சையின் அமிலத்தன்மை பற்களை வலுவிழக்க செய்து சேதமடைய செய்யும் என்று கூறப்படுகிறது.
நீரிழப்பு
பொதுவாக எலுமிச்சை சாறு குடிப்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும், ஆனால் அதிகம் குடித்தால் சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கும், இதனால் சிறுநீர் அதிகம் வெளியேறி நீரிழப்பு ஏற்படும்.
நெஞ்செரிச்சல்
எலுமிச்சை சாறு வயிற்றில் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும், இதனால் நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்பட வாய்ப்புள்ளது.