செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா..? கெட்டதா..?


Alagar Raj AP
10-05-2024, 17:56 IST
www.herzindagi.com

செம்பு பாத்திரத்தின் நன்மைகள்

    இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடலில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கவும், நோய்யெரதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வாதம், பித்தம் மற்றும் கபம் நோய்களை குணப்படுத்துவும் செம்பு பாத்திரம் முக்கியமானதாக இருக்கிறது.

பாக்டீரியாகளை அழிக்கும்

    தண்ணீரை 48 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு செப்பு பாத்திரத்தில் சேமித்து வைப்பதால் தண்ணீரில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.

நன்மைக்கு சமமான தீமை

    செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நன்மையாக இருந்தாலும் அதற்கு சமமாக உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சில பக்க விளைவுகளையும் செம்பு ஏற்படுத்தும்.

செம்பு பாத்திரத்தின் தீமைகள்

    செம்பு அதாவது தாமிரம் என்பது உடலுக்கு சிறிய அளவில் தேவைப்படும் ஒரு கனிமமாகும். இது உடலில் அதிகமானால் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கும்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு

    உடலில் தாமிரத்தின் அளவு அதிகரித்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம்.

WHO கூற்று

    உலக சுகாதர அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நபர் குடிக்கும் ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி கிராமுக்கு மேல் தாமிரம் இருக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.

உங்கள் முடிவு

    இந்த பதிவின் மூலம் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் செம்பு பாத்திரத்தில் தன்னீர் குடிக்கலாமா வேண்டாமா என்று. எதையும் பயன்படுத்துவதில் வரம்புகளை மீறாதீர்கள்.