தொண்டை கரகரப்பு குணமாக இந்த சமையலறை பொருட்கள் போதும்!
Alagar Raj AP
11-03-2024, 11:51 IST
www.herzindagi.com
பருவநிலை மாற்றத்தின் போது நம்மில் பலருக்கு தொண்டை பிரச்சனை ஏற்படுவது என்பது சாதாரணமானது. அதை எப்படி சமையலறை பொருட்களை வைத்து குணப்படுத்துவது என்று காண்போம்.
தேன் மற்றும் எலுமிச்சை
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும், தேனில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை தொண்டை கரகரப்புக்கு நிவாரணம் அளிக்கும்.
இஞ்சி மற்றும் புதினா தேநீர்
இஞ்சி மற்றும் புதினாவை கொண்டு தேநீர் குடிக்கலாம். இந்த தேநீரில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் தொண்டை வலி மற்றும் எரிச்சலை குறைக்கும்.
உப்பு நீர்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் உப்பைக் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை வாய் கொப்பளிக்கவும். இவ்வாறு செய்வதால் தொண்டையில் இருக்கும் பாக்டீரியா கொல்லப்பட்டு தொண்டை அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வெந்தயம்
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
ஒத்தடம்
ஒரு சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, அதை உங்கள் தொண்டையில் 10 நிமிடங்கள் வைத்து ஒத்தடம் கொடுத்தால் தொண்டை வலி குறையும்.
நீராவி பிடித்தல்
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் புதினாவை சேர்த்து நீராவி பிடிப்பதால் தொண்டை ஈரப்பதமாகி வறட்சி மற்றும் எரிச்சல் நீங்கும்.