மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த இலைகள் பல நோய்களுக்கு தீர்வாக அமைகின்றன. கற்பூரவள்ளி இலையின் ஆரோக்கிய நன்மைகளை ஆயுர்வேத நிபுணரான ஐஸ்வர்யா சந்தோஷ் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்…
Image Credit : freepik
சளிக்கு நிவாரணம்
மாறிவரும் பருவநிலையால் அடிக்கடி சளி மற்றும் இருமல் வரலாம். கற்பூரவள்ளி இலையின் சாறை நெற்றி மற்றும் மார்பில் தடவி வர மூக்கடைப்பு, இருமல் மற்றும் சளி பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
Image Credit : freepik
பூச்சி கடிக்கு நல்லது
பூச்சி கடித்த இடங்களின் மீது கற்பூரவள்ளி இலையின் சாறை தடவலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் தொற்றுகளை தடுக்க உதவுகிறது. சிறிய காயங்களுக்கு இந்த வைத்தியம் கைக்கொடுக்கும்.
Image Credit : freepik
நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்
கற்பூரவள்ளி சாறில் நிறைந்துள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், நோய் தொற்றுகளை தடுக்கவும் உதவுகிறது.
Image Credit : freepik
மூட்டு வலிக்கு நல்லது
கற்பூரவள்ளி இலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு கற்பூரவள்ளி இலைகள் நன்மை தரும்.
Image Credit : freepik
வயிற்றுக்கு உகந்தது
கற்பூரவள்ளி சாறு வயிறு சார்ந்த பிரச்சினைகளை நீக்குகிறது. இதை எடுத்துக் கொண்டால் அசிடிட்டி, மலச்சிக்கல், வாயு போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளை தடுக்கலாம்.
Image Credit : freepik
காய்ச்சலுக்கு நல்லது
காய்ச்சலை குறைக்க கற்பூரவள்ளி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஆன்டி வைரல் பண்புகள் காய்ச்சலை குறைக்க உதவுகிறது.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.