காய்ச்சல் அடிக்கும் போது குளிக்காமல் இருப்பது நல்லதா?
Alagar Raj AP
21-08-2024, 13:51 IST
www.herzindagi.com
பலர் காய்ச்சல் வந்தால் குளிக்க மாட்டார்கள், ஆனால் சிலர் காய்ச்சல் வந்தால் குளிக்கலாம் என்று கூறுவார்கள். இதில் எது உடலுக்கு நல்லது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காய்ச்சலில் குளிப்பது நல்லதா?
காய்ச்சலின் போது குளித்தால் பாதிப்பு அதிகரிக்கும் என்று கூறுவார்கள், ஆனால் அப்படி அல்ல. குளிப்பதால் சருமத்தில் உள்ள கிருமிகள் நீங்கும், உடல் வெப்பம் குறையும்.
எப்படி குளிக்கலாம்?
குழாய் நீரில் சூடான நீரை கலந்து வெதுவெதுப்பாக குளிர்காலம். ஆனால் மிகவும் குளிர்ச்சியான அல்லது மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவும்.
எத்தனை முறை குளிக்கலாம்?
காய்ச்சல் உள்ளவர்கள் தினமும் இரண்டு அல்லது ஒரு முறை குளிக்கலாம்.
செய்யக்கூடாதவை
நீளமான முடி உள்ளவர்கள் காய்ச்சலின் போது தலைக்கு குளிக்காமல் இருப்பது நல்லது. அப்படியே தலைக்கு குளித்தால் முடியின் ஈரத்தை சீக்கிரம் உலர வைக்கவும், இல்லையெனில் சளி பிடிக்கும் அபாயம் ஏற்படலாம்.
உடை
மேலும் குளித்த பிறகு அதே உடையை உடுத்தாமல் வேறு உடையை மாற்றுங்கள். ஏனென்றால் பழைய உடையில் உள்ள கிருமிகள் மீண்டும் உடலை பாதிக்கும்.
குளித்த பிறகு
குளித்து பிறகு காய்கறி சூப் அல்லது ஆட்டுக்கால் சுப்பு போன்ற சூடான திரவ உணவுகளை சாப்பிடுவது காய்ச்சலில் இருந்து இதமான உணர்வை தரும்.