பலவீனமான கிட்னி-யை வலுப்படுத்த பயனுள்ள குறிப்புகள்
S MuthuKrishnan
04-04-2025, 11:24 IST
www.herzindagi.com
கிட்னிக்கான ஆரோக்கியத்திற்கான குறிப்புகள்
கிட்னி செயல்பாட்டை மேம்படுத்த சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கான சில பொதுவான காரணங்களை பற்றி பார்க்கலாம்.
பலவீனம் அடைவதற்கான காரணங்கள் உயர் ரத்த சர்க்கரை அளவு கிட்னியில் உள்ள சிறிய ரத்த நாளங்கள் சேதப்படுத்துகின்றன. இதனால் கிட்னி பலவீனம் அடைகின்றன.
உயர் ரத்த அழுத்தம்
கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம் கிட்னியில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தி அவற்றின் செயல்படும் திறனை பாதிக்கிறது.
மருந்துகள்
சில வலி நிவாரணிகள் மற்றும் ஹீமோதெரபி மருந்துகள் உட்பட சில மருந்துகள் கிட்னிகளை சேதப்படுத்தும்.
பேரிச்சம்பழம்
பேரிச்சம்பழத்தை ஒரு இரவு தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுங்கள். பேரிச்சம் பழத்தில் உள்ள நார் சத்து கிட்னிகற்களை தடுக்க உதவுகிறது மற்றும் கிட்னி ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பிற தாதுக்களும் இதில் உள்ளது.
விட்டமின் சி
பலவீனமான கிட்னியை வலுப்படுத்த விட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் இவற்றில் கிட்னி கற்கள் உருவாவதை தடுக்கும் சிட்ரேட் கலவை உள்ளது
தண்ணீர்
தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவும் தண்ணீர் உங்கள் உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது. எனவேகிட்னிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
ராஜ்மா அல்லது கொண்டைக்கடலை
ராஜ்மா அல்லது கொண்டைக்கடலை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள சத்துக்கள் ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்தும் இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
பொட்டாசியம்
ஆப்பிள் கிட்னியின் அமிலத்தன்மையை பராமரிப்பதிலும் சிறுநீரகங்களுக்குள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுப்பதிலும் சிறந்தவை. எனவே பொட்டாசியம் குறைவாக உள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.