ஆரோக்கியத்தை பிரதிபலிப்பதில் உடல் கொழுப்பு முக்கிய பங்காற்றுகிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உடலில் உள்ள கொழுப்பு சதவீதத்தை எப்படி கண்டறிவது என்பதை பார்க்கலாம்.
சூத்திரம்
கொழுப்பு சதவீதத்தை கணக்கிடுவதற்கு ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறு சூத்திரம் உள்ளது. அதன்படி கொழுப்பு சதவீதத்தை கணக்கிட முடியும்.
ஆண்களுக்கான சூத்திரம்
(1.20 x BMI) + (0.23 x வயது) - 16.2 = உடல் கொழுப்பு சதவீதம்
ஆண்களுக்கு கணக்கிடும் முறை
1.20 உடன் உங்கள் BMI அவளை வகுத்து, 0.23 உடன் உங்கள் வயதை வகுத்து, அடைப்புக்குறியில் வரும் இரண்டு விடைகளையும் கூட்டி அதில் வரும் விடையை 16.2 உடன் கழித்தால் ஆண்களுக்கான உடல் கொழுப்பு சதவீதம் கிடைக்கும்.
பெண்களுக்கான சூத்திரம்
(1.20 x BMI) + (0.23 x வயது) - 5.4 = உடல் கொழுப்பு சதவீதம்
பெண்களுக்கு கணக்கிடும் முறை
1.20 உடன் உங்கள் BMI அவளை வகுத்து, 0.23 உடன் உங்கள் வயதை வகுத்து, அடைப்புக்குறியில் வரும் இரண்டு விடைகளையும் கூட்டி அதில் வரும் விடையை 5.4 உடன் கழித்தால் பெண்களுக்கான உடல் கொழுப்பு சதவீதம் கிடைக்கும்.
ஆண்களின் கொழுப்பு சதவீதம்
சராசரியாக 20 - 40 வயதுள்ள ஆண்களுக்கு கொழுப்பு 8-19 சதவீதம் இருப்பது ஆரோக்கியமானதாகவும், 19 - 25 சதவீதம் அதிக எடையாகவும் மற்றும் 25 சதவீதத்துக்கு மேல் இருப்பது உடல் பருமனையும் குறிக்கிறது.
பெண்களின் கொழுப்பு சதவீதம்
சராசரியாக 20 - 40 வயதுள்ள பெண்களுக்கு கொழுப்பு 21 - 33 சதவீதம் இருப்பது ஆரோக்கியமானதாகவும், 33 - 39 சதவீதம் அதிக எடையாகவும் மற்றும் 39 சதவீதத்திற்கு மேல் இருப்பது உடல் பருமனையும் குறிக்கிறது.