படர்தாமரை பயம் இனி வேண்டாம். இந்த எளிய மருத்துவக் குறிப்புகளை ட்ரை பண்ணுங்க!


Jansi Malashree V
04-08-2024, 13:00 IST
www.herzindagi.com

    படர்தாமரை பிரச்சனைகள் சருமத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரக்கூடும்.இதை சரி செய்வதற்கு மருந்துகள் மற்றும் ஆயில்மென்ட் தேவையில்லை. வீட்டில் உள்ள சில எளிய பொருட்கள் போதும்.

தேங்காய் எண்ணெய்:

    தேங்காய் எண்ணெய்யில் உள்ள பூஞ்சை காளான் மற்றும் நுண்ணுயிர் பண்புகள் படர்தாமரை பிரச்சனையை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும். பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்காய் எண்ணெய்யை அப்படியே அப்ளை செய்யவும்.

மஞ்சள்:

    மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் படர்தாமரை பிரச்சனையைக் குணப்படுத்த உதவுகிறது. மஞ்சளை சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் போன்று கலக்கிக்கொள்ளவும். பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களில் அப்ளை செய்யவும்.

கற்றாழை:

    கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தவும்.

லெமன்கிராஸ் எண்ணெய்:

    லெமன்கிராஸ் எண்ணெய் ரிங்வோர்ம்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு வீட்டு வைத்தியமாகும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இப்பிரச்சனைகளைச் சரி செய்வதற்கு உதவியாக உள்ளது.