சிறுநீர் பாதை தொற்றில் இருந்து நிவாரணம் பெற வீட்டு வைத்தியங்கள்
Alagar Raj AP
06-03-2024, 16:53 IST
www.herzindagi.com
உடல் சூடு அதிகமாகுதல், நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது போன்ற காரணங்கள் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டு எரிச்சல், வீக்கம், சிறுநீர் இரத்தம் கலந்து வருவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆண்களை விட பெண்களுக்கு இந்த தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
அரை டம்ளர் அரிசி நீரில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் பாதையில் எரிச்சல் குறையும்.
மாதுளம் பழச்சாற்றில் ஏலக்காய் பொடி, ஒரு டீஸ்பூன் உலர்ந்த இஞ்சி மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து குடித்தால் சிறுநீர் தொற்றுக்கு நல்ல பலனளிக்கும்.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தேன் கலந்து குடித்தால் சிறுநீர் தொற்று பாதிப்பு குறையும்.
ஒரு கிளாஸ் நீரில் நெல்லிக்காய் பொடி மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடியை கலந்து குடித்தால் சிறுநீர் தொற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.
ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகம் உட்கொள்வதால் சிறுநீர் பாதையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும்.
இந்த இணைய கதையில் குறிப்பிட்டுள்ளவை யாவும் பொதுவானவை. சிறுநீர் பாதை தொற்றுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவது தீவிரமான பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.