காகிதத்தில் மடித்த உணவை சாப்பிட்டால் இந்த ஆபத்துகள் உங்களை தேடி வரும்!
Alagar Raj AP
18-04-2024, 15:03 IST
www.herzindagi.com
பொதுவாக ரோட்டு கடைகளில் உணவுகளை செய்தித்தாள் போன்ற காகிதத்தில் மடித்து தருவது வழக்கம். இப்படி காகிதத்தில் மடித்த உணவுகளை சாப்பிடுவதால் என்ன உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும் என இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
செய்தித்தாள் இரசாயனங்கள்
செய்தித்தாள் மைகளில் டீன் ஐசோப்ரோபைலேட், டைசோப்ரோபைல் பித்தலேட் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது உணவு மூலம் உடலுக்கு செல்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
புற்றுநோய்
சூடான உணவை செய்தித்தாள்களில் வைப்பதால் அந்த வெப்பத்தால் காகிதத்தில் உள்ள மை உருகும். அதை நம் உணவுகளோடு சாப்பிடும் போது புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வுகள் கூறுகிறது.
வயிற்றுப்போக்கு
செய்தித்தாளில் உள்ள மை வயிற்றுக்குள் சென்று செரிமான மண்டலத்தை பாதித்து குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தோல் அலர்ஜி
செய்தித்தாளில் உள்ள மை உணவுகளில் ஒட்டி கொள்ளும். அப்போது அந்த உணவுகளை நாம் தோல் வெடிப்பு, அரிப்பு, தோல் அலர்ஜி போன்றவை ஏற்படலாம்.
விந்தணு குறையும்
பேப்பர் கப்பில் டீ, காபி போன்ற பானங்களை குடிப்பதால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும்.
அறிவாற்றல் குறையும்
உணவை மடிக்க பயன்படுத்தப்படும் பல காதிகங்களில் ஈயம் உள்ளது. இது பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடம் அறிவாற்றல் குறைபாடுகளை ஏற்படுத்தும்.