அடடா! ஒரு கட்டு பாலக் கீரையில் இவ்வளவு வியக்கவைக்கும் நன்மைகளா
Sanmathi Arun
06-02-2023, 12:08 IST
www.herzindagi.com
பாலக் கீரை
கீரை ஊட்டச்சத்துக்களின் சக்தியாக உள்ளது, மேலும் பிரபலமான சூப்பர்ஃபுட்களின் பட்டியலில் பாலக் கீரைக்கு எப்போதும் தனி இடம் உண்டு.பாலக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்
Image Credit : freepik
கண்களை பாதுகாக்கிறது
பாலக் கீரையில் லுடீனின் இருக்கிறது. லுடீன் என்பது ஒரு கரோட்டினாய்டு ஆகும், இது கண்கள் சேதமாவதை தடுக்கிறது. கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு ஆகியவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
Image Credit : freepik
இரத்த சோகையை தடுக்கிறது
பாலக் கீரையில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது. வாரம் இருமுறை பாலக் கீரை சாப்பிட்டாலே போதும் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
Image Credit : freepik
முடி உதிர்வை தடுக்கிறது
பெண்களின் முடி உதிர்வுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணமாகும். பாலக் கீரை போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை வாரம் 3 முறை உட்கொள்வதன் மூலம் குறைபாட்டை தவிர்த்து முடி உதிர்வதை நிறுத்த உதவும்
Image Credit : freepik
உடல் எடையை குறைக்க உதவும்
மற்ற பச்சைக் காய்கறிகளை போலவே கீரையிலும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக இருக்கிறது. இது உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. கீரையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
Image Credit : freepik
உயர் இரத்த அழுத்ததிற்கு உதவுகிறது
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக நோய்கள், பக்கவாதம் மற்றும் பிற நாள்பட்ட நோய்களை ஏற்படுத்துவதில் பிரபலமானது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பாலக் கீரை முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலின் பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கும்
Image Credit : freepik
புற்றுநோய் வராமல் தடுக்கிறது
கீரையில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு பைட்டோநியூட்ரியண்ட் ஆகும் . பாலக்க்கீரை தோல் புற்றுநோய் செல்கள் பெருகுவதை நிறுத்துகிறது.
Image Credit : freepik
இரைப்பை மற்றும் குடல் ஆரோக்கியதிற்கு
கீரையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் C இரைப்பை மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது பெருங்குடலில் உள்ள செல்களை தீங்கு விளைவிக்கும் ரேடிகல்ஸ்களிடம் இருந்து பாதுகாக்கிறது.
Image Credit : freepik
ஆரோக்கியமான எலும்புகள்
கீரையில் வைட்டமின் K நிறைந்துள்ளது, இது எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியமான கனிமமாகும். போதுமான வைட்டமின் K ஆஸ்டியோக்ளாஸ்ட்களின் அதிகப்படியான செயல்பாட்டைக் குறைக்கிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது. ஆஸ்டியோக்ளாஸ்ட் என்பது காலப்போக்கில் எலும்பு அடர்த்தியை குறைக்கும் செல் ஆகும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.