முருங்கை மரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. இன்றைய பதிவில் முருங்க இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் சாறை குடிப்பதால் உடலுக்குக் கிடைக்க கூடிய நன்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
Image Credit : freepik
முருங்கை இலையில் உள்ள சத்துக்கள்
நார்ச்சத்து
வைட்டமின் B2
கால்சியம்
இரும்புச்சத்து
கனிமங்கள்
Image Credit : freepik
சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம்
சளி மற்றும் இருமலிலிருந்து நிவாரணம் பெற முருங்கை இலை சாறை எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் சளி தொந்தரவுகளுக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்.
Image Credit : freepik
சரும ஆரோக்கியம்
முருங்கை இலை சாறில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை நீக்குகின்றன. இதைத் தொடர்ந்து குடித்து வர சரும ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும
Image Credit : freepik
எடை இழப்பு
முருங்கை இலை சாறில் குறைந்த அளவு கலோரிகளும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது இது பசியை கட்டுப்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
Image Credit : freepik
செரிமான மண்டலத்தை வலுப்படுத்தும்
செரிமான மண்டலத்தின் செயல்முறையை அதிகரிக்க மற்றும் அதில் சேரும் நச்சுக்களை நீக்க முருங்கை இலை சாறை எடுத்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து வாயு, அஜீரணம் மற்றும் வயிற்றுப் பொருமல் பிரச்சனைகளை தடுக்க உதவும்.
Image Credit : freepik
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
முருங்கை இலை சாறில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன மேலும் இதில் உள்ள வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நோய் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கின்றன.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.