கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் சீக்கிரம் குறைக்க உதவும் பழங்கள்


Alagar Raj AP
04-04-2024, 17:17 IST
www.herzindagi.com

    உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இதயம் தொடர்பான நோய்களும் அதிகரிக்கும். எனவே கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க எந்த பழங்களை சாப்பிடலாம் என்று பார்ப்போம்.

ஆப்பிள்

    ஆப்பிள்களில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். அதே சமயம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்க உதவும்.

வாழைப்பழம்

    வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் இரத்த அழுத்தத்தின் அளவையும் குறைகிறது.

பெர்ரி பழங்கள்

    பெர்ரிப் பழங்களில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் வீக்கத்தை குறைக்கிறது. இதன் தாக்கமாக உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

அன்னாசி

    அன்னாசி பழத்தில் நிறைந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயத்தைக் குறைக்கிறது.

சிவப்பு திராட்சை

    சிவப்பு திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.

அவகேடோ

    அவகேடோவில் உள்ள மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.