இரும்புச் சத்து குறைபாட்டை தவிர்க்க இந்த உணவுகளை சாப்பிடுங்க


Raja Balaji
22-05-2025, 15:19 IST
www.herzindagi.com

    இரும்புச்சத்து குறைபாடு சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, மார்பு வலி, சீரற்ற இதயத்துடிப்பு, மயக்கம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற அறிகுறிகளை காண்பிக்கும்.

உலர் அத்திப்பழம்

    இது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க செய்கிறது. உலர் அத்திப்பழத்தின் கால்சியம், நார்ச்சத்து மற்றும் இதர சத்துகள் இரத்த சோகைக்கு தீர்வு அளிக்கின்றன.

பேரீச்சைபழம்

    பேரீச்சைபழத்தின் இரும்புச்சத்து, வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கின்றன. இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

பாதாம்

    இரும்புச்சத்து குறைபாட்டை தீர்க்க பாதாமை இரவு முழுக்க தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

சாலியா விதை

    இரும்புச்சத்து மற்றும் ஃபோலிம் அமிலம் நிறைந்த சாலியா விதை இரத்த சோகைக்கு தீர்வளிக்கும்.

    இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்ய உடனடி கவனம் செலுத்துங்கள். மேற்கண்ட உணவுகளை தினமும் சாப்பிடவும்.