வயதானவர்களை அதிகம் பாதிக்கும் டிமென்ஷியா எனப்படும் மறதி நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
குறுகிய கால நினைவாற்றல்:
வயது முதிர்ந்தவர்களை உடனடியாக மறதி நோய் தாக்காது. ஆரம்பத்தில் சின்ன சின்ன விஷயங்களைக் கூட மறக்கத் தொடங்குவார்கள். எப்போதும் போல என்று அலட்சியமாக இருக்கக்கூடாது
குழப்பமான பேச்சு:
தன்னை அறியாமலேயே ஏதோ ஒன்றை நினைத்து குழப்பத்துடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அதிக மன அழுத்தம் ஒரு காரணமாக இருந்தாலும் மறதி நோயின் ஆரம்ப அறிகுறிகளாகவும் கருத்தில் கொடுங்கள்.
பயம்:
வாழ்நாள் முழுவதும் எதையும் தைரியமாக எதிர்கொண்டவர்கள், எதைக் கண்டாலும் அச்சத்துடன் பார்க்கும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.