நீங்கள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிரியரா? நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்.


S MuthuKrishnan
14-06-2024, 14:21 IST
www.herzindagi.com

அதிக சோடியம்

    இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் அதிக சோடியம் உள்ளது. இது பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் சோடியம் ஒரு அவசியமான ஊட்டச்சத்து என்றாலும் அதன் அதிகப்படியான பயன்பாடு சிறுநீரகங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Image Credit : freepik

உடல் பருமன்

    அடிக்கடி இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் உள்ளதால் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்

Image Credit : freepik

புற்றுநோய்

    இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் உள்ள பிஸ்பெனல் ஏ (பி பி ஏ) என்ற பேக்கேஜிங் பொருள் நச்சுத்தன்மை வாய்ந்தது, இன்ஸ்டன்ட் நூடுல்ஸை தொடர்ந்து உட்கொள்வதால் புற்றுநோய் குறிப்பாக வயிற்றுப் புற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

Image Credit : freepik

செரிமான பிரச்சனை

    இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் நார்ச்சத்து இல்லை, எனவே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சாப்பிடுவது வயிற்று பிரச்சனைகளை தூண்டலாம், அவற்றின் அதிக உப்பு அளவு வயிறு வீக்கம்,வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

Image Credit : freepik

மன அழுத்தம்

    இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் நமது மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் இதில் சோடியம் அதிகமாக உள்ளது. இது மூளையில் உள்ள ரசாயனங்களின் சமநிலையை சீர்குலைக்கும். இதனால் மனசோர்வு, பதற்றம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

Image Credit : freepik

ஊட்டச்சத்துக்கள் குறைவு

    இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.

Image Credit : freepik

அலர்ஜி

    இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் சுவையை அதிகரிக்க MSG போன்றவை சேர்க்கப்படுவதால், சிலருக்கு தலைவலி குமட்டல் மற்றும் பிற அறிகுறிகள் ஏற்படலாம்.

Image Credit : freepik

கெட்ட கொழுப்புகள்

    இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் இன் உற்பத்தியின் போது ட்ரான்ஸ் கொழுப்புகள் சேர்க்கப்படுகின்றன இது கெட்ட கொழுப்பை அதிகரிக்கும், மற்றும் நல்ல கொழுப்பை குறைக்கும். இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும்.

Image Credit : freepik