ஆரோக்கியம் தரும் ஆப்பிள் ஸ்மூத்தி, தினமும் காலையில் குடித்து பாருங்க!
Shobana Vigneshwar
05-10-2023, 18:00 IST
www.herzindagi.com
ஆப்பிள் ஸ்மூத்தி
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை தடுக்கவும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். இன்றைய பதிவில் ஆப்பிள் ஸ்மூத்தி குடிப்பதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்…
இரத்த சோகையை போக்கும்
தினமும் காலையில் ஆப்பிள் ஸ்மூத்தியை குடித்து வந்தால் உடலின் ஹீமோகுளோபின் அளவுகள் அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து குடித்து வர இரத்த சோகை பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
Image Credit : freepik
செரிமானத்தை மேம்படுத்தும்
ஆப்பிள் ஸ்மூத்தி குடிப்பது செரிமான மண்டலத்திற்கு நன்மை தரும். இதில் நிறைந்துள்ள நார்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
Image Credit : freepik
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்
அதிகப்படியான கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த ஆப்பிள் ஸ்மூத்தியை எடுத்துக் கொள்ளலாம். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதன் மூலம் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது.
Image Credit : freepik
கண்களுக்கு நல்லது
ஆப்பிள் ஸ்மூத்தியில் நிறைந்துள்ள வைட்டமின் A, கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது.
Image Credit : freepik
உடல் பருமனை குறைக்கலாம்
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் ஆப்பிள் ஸ்மூத்தியில் எடுத்துக்கொள்ளலாம் இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்துக் கொள்ளும் மற்றும் உடல் எடையும் கணிசமாக குறையும்.
Image Credit : freepik
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய் தொற்றுகளை தடுக்கவும் தினமும் காலையில் ஆப்பிள் ஸ்மூத்தியை எடுத்துக் கொள்ளலாம்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தக் கருத்துக்கள் யாவும் பொதுவானவையே. உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும். மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.