பெண்களின் பல நோய்களை தீர்க்கும் சங்கு பூவின் நன்மைகள்


Sanmathi Arun
04-04-2023, 07:30 IST
www.herzindagi.com

சங்கு பூ நன்மைகள்

    சங்கு பூவின் நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. இந்த பூவை இயற்கை கொடுத்த வரம் என்று கூட சொல்லலாம். சங்கு பூவின் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.

Image Credit : freepik

மாதவிடாய் வலிகளை குறைக்கிறது

    சங்கு பூவை தினசரி உட்கொள்வது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. கிருமி தொற்றால் ஏற்படும் வெள்ளை படுதலுக்கும் நிவாரணம் தருகிறது.

Image Credit : freepik

முடி உதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு

    சங்கு பூவில் ஆந்தோ சயானின் எனும் நிறமி இருப்பதால், நரை முடியை கருப்பாக மாற்றுவதில் சிறப்பு வாய்ந்தது. முடி உதிர்தல் பிரச்சனையை நிறுத்தி முடி நன்கு வளர உதவுகிறது . சங்கு பூவில் எண்ணெய் காய்ச்சி தவறாமல் பயன்படுத்தினால் கூந்தலில் நல்ல மாற்றம் ஏற்படும்.

Image Credit : freepik

உடல் எடையை குறைக்கும்

    உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்களுக்கு சங்கு பூவை டீயாக குடிப்பது சிறந்த பானமாகும் , ஏனெனில் இது குடலை சுத்தப்படுத்துகிறது, அத்துடன் பசியை ஒழுங்குபடுத்துகிறது.

Image Credit : freepik

நரம்புகளுக்கு நல்லது

    உடலில் நரம்புகள் சிறப்பாக வேலை செய்ய, அசிடில் கோலின் எனப்படும் பொருள் உதவுகிறது. சங்கு பூவை உட்கொள்ளும் போது இந்த அசிடில்கோலின் நன்றாக ஊக்குவிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

Image Credit : freepik

சர்க்கரை வியாதியை குறைக்கிறது

    சங்கு பூவை டீயாக அல்லது உணவுடன் அடிக்கடி சேர்த்து கொள்ளும் போது சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

Image Credit : freepik

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது

    சங்கு பூ நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால் இதயம் பலமடைகிறது. எனவே இதய நோயாளிகளும் சங்கு பூவை மருத்துவ ஆலோசனையுடன் உட்கொள்ள வேண்டும்.

Image Credit : freepik

கூடுதல் நன்மைகள்

  • சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகும் மாற்றும்.
  • இனப்பெருக்க பிரச்சனைகளை தீர்க்கிறது.
  • ஆண்களின் அணுக்களை அதிகரிக்கிறது.
  • சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik