உலகில் மிக நீண்ட காலம் வாழும் மக்களிடம் உள்ள 7 அன்றாட பழக்கவழக்கங்கள்
Alagar Raj AP
23-09-2024, 13:29 IST
www.herzindagi.com
கடந்த 20 ஆண்டுகளில் 100 வயதுக்கு மேல் வாழ்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் நமக்கு காட்டுகிறது. 2054 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் சுமார் 0.1% மக்கள் 100 வயதுக்கு மேல் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 300 ஆண்டுகளில் இது நான்கு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட ஆயுளுக்கான பழக்கங்கள்
நீண்ட காலம் வாழ உதவும் சில அன்றாட பழக்க வழக்கங்களை இங்கே பார்ப்போம்.
சத்தான உணவுகள்
நாம் என்ன சாப்பிடுகிறோம் அதை எப்போது சாப்பிடுகிறோம் என்பதில் தான் நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமே அடங்கியுள்ளது. எனவே ஆரோக்கியமான உணவை உண்பது ஆயுளை அதிகரிக்கும்.
எடை மேலாண்மை
உலகில் நீண்ட காலம் மக்களின் உடல் நிறை குறியீடு (பிஎம்ஐ) சரியான அளவில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே உடற்பயிற்சி செய்து உடல் எடையை சரியாக பராமரிப்பது அவசியம்.
தூக்கம்
சரியாக தூங்காவிட்டால் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வரலாம். இது உங்கள் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்பதால் இதை தடுக்க தினமும் 7-9 மணி நேரம் தூங்க வேண்டும்.
மன அழுத்தத்தை குறைக்கவும்
பல உடல்நல பிரச்சனைகளுக்கு தொடக்கமே மன அழுத்தம் தான். மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் ஆயுட்காலம் உயரும்.
அடிமையாகாமல் இருப்பது
மது, புகை போன்ற விஷயங்களுக்கு அடிமையாக இருப்பது உங்கள் ஆயுட்காலம் படிப்படியாக குறையும். இதிலிருந்து மீண்டு வந்தால் நீங்கள் வாழும் நாட்களை அதிகரிக்கலாம்.
குறிக்கோள்
வாழ்க்கையில் எந்த நோக்கம் இல்லாதவர்களை விட, குறிக்கோளுடன் இருப்பவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. எனவே உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை அறிந்து அதை அடைய முயலுங்கள்.
சமூகமயப்படுத்தல்
அதிகம் மக்களுடன் பழகுபவர்களை விட தனிமையில் இருப்பவர்களின் ஆயுட்காலம் குறைவு என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே மக்களுடன் பழகி சமூகத்துடன் இணைந்து இருப்பது உங்களை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.