அதிக கொலஸ்ட்ரால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வரை யாரும் அதை கவனிப்பதில்லை. ஏனெனில் கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் பொதுவாக வெளிப்படையாக தெரிவதில்லை. இருப்பினும் சில சத்தமில்லாத அறிகுறிகள் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதை குறிக்கிறது.
குளிர்ந்த பாதங்கள்
அதிக கொலஸ்ட்ரால் காரணமாக பாதங்களில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் இதனால் பாதங்களில் குளிர்ச்சி அல்லது உணர்வின்மை ஏற்படும்.
அதிக வியர்வை
கொலஸ்ட்ரால் பிளேக்குகள் இரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகளில் படிந்து இரத்தம் செல்வதை கடினமாக்கும். இதனால் இதயம் அதிகமாக துடிக்கும், அதன் விளைவாக உடல் சோர்வடைந்து அதிகம் வியர்க்கும்.
நுரையுடன் சிறுநீர்
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் சிறுநீர் நுரையாக வெளியேறும் அத்துடன் சிறுநீர் நிறம் கருமையாக இருக்கும்.
வறண்ட தோல்
அதிக கொலஸ்ட்ரால் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இதன் விளைவாக தோல் வறட்சி ஏற்படும். மேலும் கொலஸ்ட்ரால் காரணமாக சருமத்திற்கு இரத்த குறையும், இதன் காரணமாகவும் தோல் வறட்சி ஏற்படும்.
கண் பாதிப்பு
கொலஸ்ட்ரால் பிளேக்குகள் விழித்திரையில் இரத்த நாளங்களை தடுக்கும் போது மங்கலான பார்வை, கண் வலி, கண்களை சுற்றி மஞ்சள் நிற புடைப்புகள் மற்றும் கரும்புள்ளிகள் உண்டாகும்.
குமட்டல்
எந்த உணவுகளை சாப்பிட்டாலும் அடிக்கடி குமட்டல் ஏற்படுவது அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கும். கொலஸ்ட்ரால் பிளேக்குகள் இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் இரத்தத்தை பாதிப்பதால் குமட்டல் ஏற்படும்.